விபத்தில் சிக்கிய பெண்ணை தனது காரில் அனுப்பிய கமல்

news18
Updated: May 16, 2018, 9:24 PM IST
விபத்தில் சிக்கிய பெண்ணை தனது காரில் அனுப்பிய கமல்
விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய கமல்ஹாசன்
news18
Updated: May 16, 2018, 9:24 PM IST
விபத்தில் சிக்கிய பெண்ணை நடிகர் கமல்ஹாசன் தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

கன்னியாகுமரியில் மக்கள் நீதி மய்யத்தின் பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன், குளச்சலில் மீனவ பிரதிநதிகள் மத்தியில் பேசினார். அப்போது, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறினார். தொடர்ந்து, கருக்கல் சாலை வழியாக சென்றபோது, ஆனகுழி எனும் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் ஒருவர் உதவியின்றி தவித்துக் கொண்டிருப்பதை கண்டு காரை நிறுத்தச் செய்தார். பின்னர் அந்த பெண்ணை மீட்டு, தமது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 3 நாள் சுற்றுப்பயணத்தை இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கினார். காலை 9 மணி அளவில் கன்னியாகுமரி வந்த கமல்ஹாசன் காந்தி மண்டபத்தில் இருக்கும் அஸ்தி பிடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ரயில் நிலையம் சந்திப்பில் இருந்து செந்தாமரை பகுதிக்கு சென்ற கமல் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் உரையாற்றினார். கல்வியும், சுகாதாரமும் தான் தமிழகத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன் 12 வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பணத்தை வைத்து மட்டும் அரசியலில் எதையும் சாதித்துவிட முடியாது என கமல்ஹாசன் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்