• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தயாரிப்பு நிறுவனங்களுக்கு கமல்ஹாசன் வைத்த செக்..!

தயாரிப்பு நிறுவனங்களுக்கு கமல்ஹாசன் வைத்த செக்..!

இந்தியன் 2

இந்தியன் 2

  • Share this:
இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்த சந்திரன், மது, கிருஷ்ணா ஆகியோரின் உயிரிழப்புக்கு கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தார்.

இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தது. தொடர்ந்து அவர்களுக்கான குரல்கள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டிருந்தது.  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில்,”ஒரு திரைப்படத்தை துவங்கும் போது நடிகர் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்த பின்னரே தயாரிப்பு நிறுவனம் படத்தை துவங்க வேண்டும்” என கமலஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான முழுபொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும் என்று கமல்ஹாசன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: