விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தில் இருந்து கமலா பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.
சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா, மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான கமலா புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. தற்போது முழு பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ள இந்த பாடலுக்கு வேட்டி கட்டி விஜய் சேதுபதி குத்தாட்டம் போடுவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.