இன்ஸ்ட்ராகிராமில் கமல்ஹாசனின் முதல் பதிவு

news18
Updated: June 12, 2018, 8:26 PM IST
இன்ஸ்ட்ராகிராமில் கமல்ஹாசனின் முதல் பதிவு
இன்ஸ்ட்ராகிராமில் கமல் ஹாசன்
news18
Updated: June 12, 2018, 8:26 PM IST
பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனைத் தொடர்ந்து இன்ஸ்ட்ராகிராமில் இணைந்த திரை  நட்சத்திரமாக கமல்ஹாசன் மாறியுள்ளார்.

இன்ஸ்ட்ராகிராமில் பெரும்பாலான சினிமா பிரபலங்கள் தங்களது புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

அண்மையில் இன்ஸ்ட்ராகிராமில் அதிகமான நபர்கள் பின்தொடரும் இந்திய நடிகை என்ற பெருமையை பிரியங்கா சோப்ரா பெற்றார்.

இந்நிலையில், கமல்ஹாசன் இன்ஸ்ட்ராகிராமில் இணைந்துள்ளார். கமல் ஹாசன் நடிக்கும் விஸ்வரூபம் -2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அந்த விழா தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இன்ஸ்ட்ராகிராமில் கமல் இணைந்துள்ளார்.

அந்த தளத்தில் விஸ்வரூபம் -2 படத்தின் போஸ்டரை முதல் பதிவாக பதிவிட்டுள்ளார். இன்ஸ்ட்ராகிராமில் இணைந்த சில மணி நேரத்துக்குள், கமலை சுமார் 20,000 பேர் பின் தொடர்ந்துள்ளனர்.
First published: June 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...