HOME»NEWS»ENTERTAINMENT»kamal haasan surgery finished shruti and akshara haasan statement msb

கமல்ஹாசன் ஆப்ரேஷன் சக்சஸ்

கமல்ஹாசனுக்கு காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் இன்னும் நான்கைந்து நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் ஆப்ரேஷன் சக்சஸ்
கமல்ஹாசன்
  • Share this:

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தீவிர அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கமல்ஹாசன், காலில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் ஓய்வு எடுப்பதாக சமீபத்தில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் விடுத்திருந்த அறிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஓர் அறுவை சிகிச்சை செய்ததாகவும், அப்போது ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும்அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும், தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக மக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தங்களது தந்தைக்கு செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.



அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார்.” இவ்வாறு ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: