'மநீம சார்பில் ஒரு மீனவர் சட்டப்பேரவைக்கு செல்வார்'- கமல்ஹாசன்

'மநீம சார்பில் ஒரு மீனவர் சட்டப்பேரவைக்கு செல்வார்'- கமல்ஹாசன்

கமல்ஹாசன்

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் கூடிய அரசியலை முன்னெடுப்போம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து பணிகளையே சாதனையாக பேசிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ஏரி, குளங்களை மீட்டெடுப்பதே தங்களது கடமை என்று தெரிவித்துள்ளார்.

  சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் கடந்த 13ஆம் தேதி தொடங்கினார். தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென்மாவட்டங்களில் 4 நாட்கள் பிரசாரம் மேற்கொண்ட அவர், தனது 2-வது கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்கினார்.

  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ஜகஜீவன்ராம் சாலையில் மழைநீர் வடிகால் அமைப்பதால்அ, நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வடிகால் பகுதிகளை கமல்ஹாசன் பார்வையிட்டார்.

  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தரமற்ற முறையில் கட்டப்படும் வடிகாலால் கழிவுநீர் தேங்கும் பகுதியாக மாறிவிடும் எனவும் எச்சரித்தார். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் கூடிய அரசியலை முன்னெடுப்போம் எனக் கூறிய அவர், கடற்கரையோர பகுதி மக்களின் குறைகளை களைய சட்டப்பேரவையில் தங்களது கட்சி சார்பில் மீனவ பிரதிநிதி ஒருவர் இருப்பார் என்றும் உறுதியளித்தார்.

  அதைத்தொடர்ந்து போரூர், பூந்தமல்லி பகுதிகளில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
  Published by:Sankaravadivoo G
  First published: