• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Kamal Haasan Bigg Boss - Season 5 : 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Kamal Haasan Bigg Boss - Season 5 : 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

'பிக் பாஸ் 5' நிகழ்ச்சி

'பிக் பாஸ் 5' நிகழ்ச்சி

'பிக் பாஸ் 5' நிகழ்ச்சி அநேகமாக கடந்த ஆண்டை போல நடப்பாண்டும் அக்டோபர் மாதம் துவக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஸ்டார் விஜய் டிவி-யில் ஓளிப்பரப்பாகி வருகிறது பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ. நெதர்லாந்தில் நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தை பின்பற்றி பல இந்திய மொழிகளில் இந்த ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தனது அரசியல் பயணத்திற்கிடையேயும் இதுவரை நடந்த பிக்பாஸின் 4 சீசன்களையுமே நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

டிவி ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவை பெற்று, சமீபத்திய காலங்களில் அதிக டிஆர்பி மதிப்பீடுகளை பெற இந்த நிகழ்ச்சிக்கு கமல் தொகுப்பாளராக இருப்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்டாக உள்ளது. 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக தாமதமாக துவங்கப்பட்டு அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பப்பட்டது.

ALSO READ |  நடிகை சாந்தினி - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 5 வருட காதல் பின்னணி என்ன?

கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகர் கமல், வார இறுதியில் ஒரு நாள் மட்டும் பிக் பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஒரு வாரத்திற்கு தலா ரூ .3 கோடியை சம்பளமாக பெற்று கொண்டார். கமல் பங்கேற்கும் காட்சிகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்கள் மட்டுமே வழக்கமாக சேனலில் ஒளிபரப்பப்படும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல் தோல்வியை தழுவினார். ஒருவேளை அவரும் அவரது கட்சியும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருந்தால் இனி கமலை பிக் பாஸில் காண முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-க்கான கமல்ஹாசனின் சம்பளம் பற்றி இணையத்தில் சில தகவல்கள் பரவி வருகின்றன. ரியாலிட்டி கேம் ஷோவான பிக் பாஸின் 5 வது சீசனை நடத்த கமல் முன்பை விட வாரத்திற்கு கூடுதலாக தலா ரூ.50 லட்சம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாரத்திற்கு சுமார் ரூ.3.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் கமல்.

ALSO READ | வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது - நடிகை பார்வதி எதிர்ப்பு

இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதை அடுத்து பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்க உள்ள கமல் ஒட்டு மொத்தமாக சுமார் ரூ.50 கோடியை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால் கடந்த ஆண்டை போல கோவிட் தொற்று சற்று தணிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதும் பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் என்று தெரிகிறது.

அநேகமாக கடந்த ஆண்டை போல நடப்பாண்டும் அக்டோபர் மாதம் துவக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: