• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’ஜனநாயக நாட்டில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ - நகைச்சுவை நடிகர் செந்தில் கருத்து

’ஜனநாயக நாட்டில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ - நகைச்சுவை நடிகர் செந்தில் கருத்து

நகைச்சுவை நடிகர் செந்தில்.

நகைச்சுவை நடிகர் செந்தில்.

ஜனநாயக நாட்டில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் அங்கு நிறுவப்பட்டுள்ள சங்கரதாஸ் ஸ்வாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, புதுக்கோட்டை சங்கத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், நடிகர் சங்கத்தில் இளைய தலைமுறையினர் வந்துள்ளனர்; அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுவே என் முடிவு என்று கூறிய செந்தில், கொரோனா காலத்தில் திரையரங்கு மூடப்பட்டதால் தயாரிப்பாளர்கள் படம் தயாரித்த நிலையில், தாங்கள் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டிக்கொண்டிருக்க முடியாது என்பதால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ஒரு ஜனநாயக நாட்டில் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார். திரைத்துறையில் எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் எளிதில் செய்து விடலாம் என்று கூறிய நடிகர் செந்தில், நகைச்சுவை மட்டும் எளிதாக நடித்துவிட முடியாது. நகைச்சுவை பெண் நடிகர்கள் குறைந்து வருவதால், பெண்கள் நகைச்சுவையாக நடிக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.

    Also read: ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது: இரவு முழுவதும் மருத்துவமனையில் இருப்பார் - அப்போலோ விளக்கம்

    மருத்துவ உதவிகள்கூட கிடைக்காமல் உள்ள சிறிய சிறிய நகைச்சுவை நடிகர்களுக்கு அரசு உதவி செய்யவேண்டும் என்றும் நலிவடைந்த நாடக நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் உதவிகளைச் செய்திருப்பார். அவர் அனைத்து உதவிகளையும் செய்வதாக இருந்த நிலையில் அதற்குள் அவர் மறைந்து விட்டார் என்றும் கூறினார்.

    மேலும் கூறுகையில், என்னுடைய தேர்தல் பிரச்சாரம் யாருக்கு என்று ஜனவரி மாதம் கூறுவேன். அதிமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் உள்ளதா என்பதை தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்வோம். நான் இப்போது நடுநிலையாகத்தான் உள்ளேன். சசிகலா சிறையிலிருந்து வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: