‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலுக்கு நடனமாடிய நடிகருக்கு கமல் பாராட்டு...

நடிகர் அஸ்வின்

அபூர்வ சகோதரர்கள் பட பாடலுக்கு நடனமாடிய அஸ்வின் குமாருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  1989-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். இந்தப் படத்தில் புலி வேசம் கட்டியபடி கமல்ஹாசன் நடனமாடும் அண்ணாத்த ஆடுறார் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற பாடலாகும்.

  இந்தப் பாடலுக்கு உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில்லில் ஏறி நடனமாடி அதை சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றினார் நடிகர் அஸ்வின். இந்த நடன வீடியோவைப் பார்த்த பலரும் கமல் நடனமாடுவது போன்றே இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்கள். அதேவேளையில் இந்த வீடியோ சமூகவலைதளவாசிகளிடையே அதிக கவனமும் பெறத் தொடங்கியது.

  கடைசியாக கமல்ஹாசன் கண்ணில் இந்த வீடியோ தென்படவே, அதைப்பார்த்து நடிகர் அஸ்வின் குமாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

   

  மேலும் படிக்க: சன் டிவி சீரியலில் நடிக்கும் யாஷிகா ஆனந்த் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் ட்விட்டர் பதிவில், “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை” என்று அஸ்வினை பாராட்டியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: