ஆரம்பிக்கலங்களா? லோகேஷ் கனகராஜுடன் விக்ரம் படப்பிடிப்பிற்கு பறந்த கமல்

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விமானத்தில் பயணித்த புகைப்படத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  'கைதி' மற்றும் 'மாஸ்டர்' ஆகியப் படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கடந்த மாத இறுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்ததையடுத்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

  இதனிடையே கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் 'விக்ரம்' படத்தின் முன் தயாரிப்பில் தற்போது பணியாற்றி வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கோவிட் மீண்டு வந்துள்ளதாகவும், சமீபத்திய பரிசோதனையில் எதிர்மறையை சோதித்ததாகவும் ட்விட்டரில் அறிவித்தார்.

   

      

  இந்நிலையில் தற்போது நடிகர் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஆரம்பிக்கலங்களா? என கமலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

   

      

  'விக்ரம்' திரைப்படம் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தின் பணிகள், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் இதன் படப்பிடிப்பை தொடங்குவார் என கூறப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இப்படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
  Published by:Sankaravadivoo G
  First published: