வெள்ளத்தில் மூழ்கும் கேரளா: கமல்ஹாசன் ₹25 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தில் மூழ்கும் கேரளா: கமல்ஹாசன் ₹25 லட்சம் நிதியுதவி
கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: August 13, 2018, 4:27 PM IST
  • Share this:
கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் ₹25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தென் மேற்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கேரளாவில் உள்ள வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையிலிருக்கும் 5 மதகுகளிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பெரியார் நதி ஓரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 30 - க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படையினருடன் இணைந்து முப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கமல் ஹாசன் ₹25 லட்சமும், விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ₹25 லட்சமும் “கேரள முதலமைச்சர் துயர் நிவாரண நிதிக்கு” வழங்கியுள்ளனர். அனைவரும் இப்பேரிடர் காலத்தில் நமது சகோதரர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
First published: August 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading