வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு.’ கமல்ஹாசன் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இத்திரைப்படம் வசூலைக் குவித்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தை அடுத்து ஓய்வில் இருக்கும் கமல்ஹாசன், சமீபத்தில் ‘ஜிப்ஸி’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது ராஜு முருகன், கவுதம் மேனன், நடிகர் ஜீவா உள்ளிட்டோர் கமல்ஹாசனை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது கமல்ஹாசனிடம், வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் கவுதம் மேனனிடம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனும் மீண்டும் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதால் வேட்டையாடு விளையாடு 2 படத்துக்கு ஓகே சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த பின்னர் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.