'தலைவன் இருக்கின்றான்' படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையவிருக்கும் கமல் ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணையத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நேரலையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக விஜய் சேதுபதியுடன் கமல் ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக ரகுமானுடன் கமல் களமிறங்கவுள்ளார். வரும் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு கமல் ஹாசன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
தலைவன் இருக்கின்றான் படம் குறித்தும் இசை மற்றும் திரைப்பட தொழில்நுட்பங்கள் குறித்தும் இருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.