நடிகை அஞ்சனாவுக்கு நிச்சயதார்த்தம் - வருங்கால கணவர் யார் தெரியுமா?

அஞ்சனா

சன் டிவியில் தொடர்ச்சியாக ஹிட் சீரியல்களை இயக்கி வருபவர் இயக்குநர் திருமுருகன். மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் என மெகாஹிட் சீரியல்களை கொடுத்த அவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண வீடு’ என்ற சீரியலையும் அவரே இயக்கி நடத்திருந்தார்.

  • Share this:
சன் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண வீடு’ சீரியலில் நடித்த நடிகை அஞ்சனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சன் டிவியில் தொடர்ச்சியாக ஹிட் சீரியல்களை இயக்கி வருபவர் இயக்குநர் திருமுருகன். மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் என மெகாஹிட் சீரியல்களை கொடுத்த அவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண வீடு’ என்ற சீரியலையும் அவரே இயக்கி நடத்திருந்தார். முதலில் இயக்குநராக சின்னத்திரையில் அறிமுகமான திருமுருகன், பின்னர் நடிகராகவும் மாறினார். அற்புதமான நடிப்பாற்றலால் இணையவாசிகளின் கவனத்தையும் பெற்று, மீம் கிரியேட்டர்களின் ஆதர்சன நாயகனாகவும் திகழ்ந்தார். அவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான ‘கல்யாண வீடு’ சீரியல் சுமார் 650 எபிசோடுகளைக் கடந்து கடந்த ஆண்டு நிறைவு பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தொடருக்கு முன்புவரை இயக்குநர் மற்றும் நடிகராகவும் அறியப்பட்ட அவர், ’திரு பிக்சர்ஸ்’ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த தொடரை இயக்கி வெற்றி பெற்றார். இந்த தொடரில் ’ஸ்வேதா’ கதாப்பாத்திரத்தில் நடிகை அஞ்சனா நடித்திருந்தார். கதைப்படி, கதிரேசன் கதாப்பாத்திரத்தில் நடித்த இயக்குநர் திருமுருகனுக்கு முன்னாள் காதலியாவார். சீரியலில் பல்வேறு டிவிஸ்டுகள் ஏற்படுவதற்கும், கதைக்களம் விறுவிறுப்பாக செல்வதற்கும் இவரின் கதாபாத்திரமே முக்கிய காரணமாக இருந்தது.அடுத்து என்ன நடக்கும், ’ஸ்வேதாவுக்கு திருமுருகனுக்கும் இடையே இருந்த தொடர்பு வெளியே தெரிந்துவிடுமோ? என்ற சுவாரஸ்யத்திலேயே கதைக்களமும் நகர்ந்தது. இந்நிலையில், அந்த தொடரின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அஞ்சனாவுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அஞ்சனா பகிர்ந்துள்ளார். அவரின் நிச்சயதார்த்த நிகழ்வில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

Also read... யார் இந்த டேன்ஸிங் ரோஸ்? - ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் அனைவராலும் பாராட்டப்படும் நடிகர்!

சிரித்த முகத்துடன் வருங்கால கணவருடன் போஸ் கொடுக்கும் அஞ்சனாவுக்கு, சக நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற இருக்கும் அஞ்சனாவின் திருமண தேதி குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதே தொடரில், இயக்குநர் திருமுருகனுக்கு ஜோடியாக, அதாவது கதிரேசன் கதாப்பாத்திரத்துக்கு ஜோடியாக நடித்த ஸ்பூர்த்தி கவுடாவுக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது. ஆனால், அவர் சீரியல் முடிவடைவதற்கு முன்பே ‘கல்யாண வீடு’ சீரியலில் இருந்து விலகியிருந்தார். 
View this post on Instagram

 

A post shared by Anjana k r (@anjana.k.r)


அவர் ஏன் விலகினார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், திருமண ஏற்பாடுகள் காரணமாக விலகியதாக அப்போது கூறப்பட்டது. கல்யாண வீடு சீரியல் குடும்ப பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற தொடராக இருந்தது. ஏறத்தாழ, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விறுவிறுப்பாக சீரியல் சென்றது. கல்யாண வீடு என்ற சீரியலின் பெயருக்கு ஏற்ப, அந்த சீரியலில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகைகளுக்கு தற்போது வரிசையாக திருமணம் நிச்சயமாகி வருகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: