ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கல்யாண பரிசு சீரியல் நடிகைக்கு டும் டும் டும்! - வைரலாகும் வீடியோ

கல்யாண பரிசு சீரியல் நடிகைக்கு டும் டும் டும்! - வைரலாகும் வீடியோ

நடிகை ஸ்ரித்திகா

நடிகை ஸ்ரித்திகா

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கல்யாண பரிசு சீரியல் தொடரில் நடிக்கும் நடிகை ஸ்ரித்திகாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

  தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான தொடர் மெட்டி ஒலி. இந்த சீரியலில் தான் ஸ்ரித்திகா அறிமுகமானார். தொடர்ந்து கலசம், கோகுலத்தில் சீதை, நாதஸ்வரம் தொடர்களில் நடித்து வந்த இவர், உறவுகள், வைதேகி காத்திருந்தால் உள்ளிட்ட டிவி சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

  டிவி சீரியல்கள் மட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர் ஆகிய படங்களில் தலைகாட்டிய ஸ்ரித்திகாவுக்கு வெள்ளித்திரை அவ்வளவாக கை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் சீரியலுக்கு திரும்பிய அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண பரிசு, அழகு ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

  இந்நிலையில் 33 வயதான ஸ்ரித்திகா தற்போது சனீஷ் என்பவரை மணந்துள்ளார். இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்து முடிந்தது. திருமண வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஸ்ரித்திகாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
   
  View this post on Instagram
   

  Finally.... It was our marriage on 30th December 2019... I'm officially Mrs. Srithika Saneesh now


  A post shared by Srithika Sri (@srithika_sri) on  மேலும் படிக்க: ‘மை பேபி ஹேப்பி நியூ இயர்’... வைரலாகும் விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா புகைப்படங்கள்!

  Published by:Sheik Hanifah
  First published: