• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்த ஜெயராம் மகன் காளிதாஸ்...!

விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்த ஜெயராம் மகன் காளிதாஸ்...!

காளிதாஸ் ஜெயராம்

காளிதாஸ் ஜெயராம்

காளிதாஸ் பாலாஜி தரணீதரனின் ஒரு பக்க கதை படத்தில்தான் அறிமுகமானார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ராஜ் கமல் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் படத்தில் இணைந்திருப்பதாக லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கமலும், ஜெயராமும் நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் என்பதைவிட கமலின் ரசிகர் ஜெயராம் எனலாம். இவர்கள் இருவரும் இணைந்து முதல்முதலாக 1989 இல் சாணக்யன் மலையாளப் படத்தில் நடித்தனர்.



இந்தப் படத்தில்தான் நடிகை ஊர்மிளா மடோன்கர் அறிமுகமானார். கமலின் மலையாள நண்பர் சோமன் மற்றும் திலகன் வில்லன்களாக நடித்திருந்தனர். அதன் பிறகு பல படங்களில் கமலும், ஜெயராமும் இணைந்து நடித்தனர். இப்போது ஜெயராமின் மகன் கமலுடன் நடிக்கிறார்.

Also read.... ராம் சரண் படத்தின் நாயகி யார்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஷங்கர்!

காளிதாஸ் பாலாஜி தரணீதரனின் ஒரு பக்க கதை படத்தில்தான் அறிமுகமானார். அப்போது நடந்த நிகழ்வில் கமல் காளிதாஸை அறிமுகப்படுத்தி வைத்தார். துரதிர்ஷ்டவசமாக ஒரு பக்க கதை தள்ளிப் போய் வேறு படங்களில் காளிதாஸ் நடித்தார். கிருத்திகா இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவர் நாயகனாக நடிக்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: