• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உதவிக்கு ஆளின்றி ரோட்டில் கிடந்த டி.எம்.சவுந்தரராஜனின் தம்பி

உதவிக்கு ஆளின்றி ரோட்டில் கிடந்த டி.எம்.சவுந்தரராஜனின் தம்பி

டிஎம் கிருஷ்ணமூர்த்தி

டிஎம் கிருஷ்ணமூர்த்தி

இசை உலகில் கொடிகட்டிப் பறந்த டி.எம் சவுந்தரராஜனின் சொந்த தம்பி கலைமாமணி விருது பெற்ற டி.எம் கிருஷ்ணமூர்த்தி உதவிக்கு ஆளின்றி நடுரோட்டில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • Share this:
இசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி இன்றுவரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.

டிஎம்எஸ்.,யை விட நான்கு வயது இளையவரான டி.எம் கிருஷ்ண மூர்த்தி மிருதங்க வித்துவானாக ஜொலித்தவர். குறிப்பாக அவரது சகோதரர் டிஎம்எஸ்.,க்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவர். இவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

தற்பொழுது 94 வயதான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி , 91 வயதான தனது மனைவியுடன் ஒத்தக்கடை அருகே நரசிங்கம் அப்பகுதியில் வசித்து வருகிறார். கலைமாமணி விருது பெற்றதற்காக தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 2500 ரூபாயை நம்பியே இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

அதற்கான ஓய்வூதிய புதுப்பிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதால் அதை புதுப்பிப்பதற்காக ஒத்தக்கடை பகுதியிலிருந்து அரசு பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். நிற்க முடியாத அளவிற்கு முதுமை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சாலையில்  மயங்கி விழுந்தார்.

தூக்க ஆளின்றி நீண்ட நேரம் கூச்சலிட்டுக் கொண்டு இருந்த அவரை அங்கிருந்தவர்கள் தூக்கி விசாரித்தபோது வந்த காரணத்தைக் கூறினார். ஓய்வுதியம் புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் நடைபெறுவதால் சென்று வருமாறு மாவட்ட கருவூல அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் ஆட்டோ மூலம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆதரவின்றி முதுமையில் பிரபலங்கள் கூட தவிர்த்து வருவது வேதனை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Also read... குறைவாக இயக்கப்படும் பேருந்துகள்: இடைவெளியில்லாமல் நெருக்கியடித்தபடி பயணிக்கும் பொதுமக்கள்..






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: