கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணம் என்ன? சிபிஐ அறிக்கை தாக்கல்

நடிகர் கலாபவன் மணி
- News18 Tamil
- Last Updated: December 31, 2019, 3:31 PM IST
நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி நடிகர் கலாபவன் மணி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அதேநாளில் கலாபவன் மணி மரணமடைந்தார். இதையடுத்து, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், கிருமி நாசினி இருந்ததும் தெரிய வந்தது. அதேவேளையில் ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் வேறுமாதிரி இருந்தன. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், அவரது மனைவி தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் 32 பக்க விசாரணை அறிக்கையை கொச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கலாபவன் மணியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்ததால் தான் அவர் மரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கலாபவன் மணிக்கு பச்சையாக காய்கறிகளை உண்ணும் பழக்கம் இருந்துள்ளதாகவும், அதனால் அவரது உடலில் க்ளோர்பைரிபோஸ் என்ற பூச்சிக் கொல்லி கலந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிள்ளது.
மேலும் படிக்க: 2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகைகள்... யார் யாருக்கு எந்தெந்த இடம்2019-ம் ஆண்டின் டாப் 5 நடிகர்கள்... முதலிடத்தில் அஜித்!
கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி நடிகர் கலாபவன் மணி திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அதேநாளில் கலாபவன் மணி மரணமடைந்தார். இதையடுத்து, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், கிருமி நாசினி இருந்ததும் தெரிய வந்தது. அதேவேளையில் ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் வேறுமாதிரி இருந்தன.