• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மேக்கப் இல்லாமல் காஜல் சொல்லும் கருத்து - வைரலாகும் போட்டோஸ்!

மேக்கப் இல்லாமல் காஜல் சொல்லும் கருத்து - வைரலாகும் போட்டோஸ்!

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

  • News18
  • Last Updated :
  • Share this:
    மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தையும், உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

    தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது ஜெயம் ரவியின் 24-வது படமான கோமாளி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது மேக்கப் இல்லாத புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர்,

    மக்கள், தங்களை எங்கேயும் கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை, நாம் உடல் ஈர்ப்பில் வெறிபிடித்த தன்மை கொண்ட உலகில் வாழ்கிறோம் அல்லது யாரின் மீது நாம் சுய மதிப்பு கொண்டுள்ளோமோ மற்றும் என்ன விஷயத்தை பெருமிதம் கொள்கிறோமோ அதனை சமூக வலைதளங்கள் விழுங்கிவிடுகின்றன. கோடிக்கணக்கான பணம் அழகு சாதனப் பொருள்களுக்காக செலவுசெய்கிறோம். அது, நம்முடைய உடல் சரியாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

    எல்லா இடங்களிலும் நாசிசம் இருப்பது தெரிகிறது. அந்தக் கோடுகளுக்கு இடையில், நாம் கூட்டத்துடன் இணைந்து கொள்ள முயற்சி செய்கிறோம் அல்லது வெளியேறிவிட்டதாக உணருகிறோம்.

    நமக்கு வேறு ஒரு உருவத்தை நாம் செதுக்கிக் கொள்வதோ அல்லது நம்மை வரையறுத்துக்கொள்வதற்கு மாறாக, எப்போது நாம் யார் என்பதை ஒப்புக்கொள்ளத் தொடங்குகிறோமோ அதுதான், நாம் சந்தோசமாக இருப்பதற்கான ஒரே வழி.

    ஒப்பனைகள், நம்முடைய வெளிப்புறத்தை அழகுப்படுத்தினாலும், அது, நம்முடைய குணத்தை கட்டமைக்காது. அது நாம் யார் என்பதை வரையறுக்காது” என்று கூறியுள்ளார்.




    காஜல் அகர்வாலின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற நடிகைக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: