Kajal Agarwal: கருங்காப்பியம்-சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்ட கதையில் காஜல் அகர்வால்..

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி மற்றும் ஈரானிய நடிகை நொய்ரிகா என 4 நடிகைகள் கொண்ட கருங்காப்பியம் படத்தில் 1940 காலக்கட்டத்தை சேர்ந்தவராக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

  • Share this:
    யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம், காட்டேரி படங்களை இயக்கிய டீகேயின் புதிய படம், கருங்காப்பியம். இதில் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த கதையில் காஜல் அகர்வால் நடிக்கிறார். 

    டீகே என்றாலே ஹாரர் படங்களை இயக்குகிறவர் என ரசிகர்கள் மனதில் பதிந்து போயுள்ளது. இவரது புதிய படம், கருங்காப்பியம். காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி மற்றும் ஈரானிய நடிகை நொய்ரிகா ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். பல காலகட்டங்களை கொண்ட இந்தக் கதையில், காஜல் அகர்வால் சுதந்திரத்துக்கு முந்தைய 1940 காலகட்டத்தைச் சேர்ந்தவராக வருகிறார்



    1940 இல் இருந்த பண்ணையாரின் மகளாக காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது. விசேஷ சக்திகள் கொண்ட அவர் மக்களின் மீது அன்பு கொண்டவர். அவர்களுக்கு நல்லது செய்கிறார். அவரிடம் உள்ள விசேஷ சக்தியே அவருக்கு எப்படி எதிரியாகிறது என்பதுபோல் கதை எழுதப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை பொள்ளாச்சியில் எடுக்க உள்ளனர்.

    1940 காலகட்ட காட்சிகள் என்பதால் இதை ப்ரீயட் படம் என நினைக்க வேண்டாம். நிகழ்கால காட்சிகளும் படத்தில் உள்ளன.
    Published by:Tamilmalar Natarajan
    First published: