• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காஜல் அகர்வாலுக்கு மேடையிலேயே முத்தம் கொடுத்த பிரபல கேமராமேன்!

காஜல் அகர்வாலுக்கு மேடையிலேயே முத்தம் கொடுத்த பிரபல கேமராமேன்!

நடிகை காஜல் அகர்வால் மற்றும் சோட்டா கே நாயுடு

நடிகை காஜல் அகர்வால் மற்றும் சோட்டா கே நாயுடு

நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் மேடையிலேயே முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் மேடையிலேயே முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அவர், தற்போது கவச்சம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்ரீனிவாச மாமில்லா இயக்கியிருக்கும் இந்தப் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காஜல் அகர்வால் பேசும் போது, “வித்தியாசமான கதைக் களம் கொண்ட த்ரில்லர் படம். த்ரில்லரோடு ரொமான்ஸும் அமைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை மிகவும் ரசித்து, விரும்பி நடித்திருக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் சிறப்பாக வந்திருக்கிறது. கதை சொல்லும் போது பிடித்திருந்ததை விட படத்தில் நடிக்கும் போது இன்னும் சுவாரஸ்யமாக அமைந்தது. கதைதான் இந்தப் படத்தின் ஹீரோ” என்று கூறினார்.

மேலும் படத்தில் பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.







அப்போது படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு பற்றி பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கையில் மேடையில் நேரடியாக காஜல் பேசும் இடத்திற்குச் சென்று சோட்டா திடீரென காஜலின் கன்னத்தில் முத்தமிட்டார். இதனையடுத்து, தங்களது குடும்பத்தில் ஒருவர் போன்றவர் சோட்டா என்று காஜல் கூறினார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாபா படத்திற்கு சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: