• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கடாரம் கொண்டான்: விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்!

கடாரம் கொண்டான்: விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்!

கடாரம் கொண்டான்

கடாரம் கொண்டான்

கமல்ஹாசன் தயாரிப்பில் விகரம் கடாரம் கொண்டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் `கடாரம் கொண்டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

    சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.



    ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் அவருக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: 

    ‘சர்கார்’ படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த விஜயின் மனைவி

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: