’விரைவில் என்னை பார்க்கலாம்’ - விஜய் டீவி புகழ் ‘புலிகேசி’ கொடுத்த அப்டேட்!

ராகவேந்திர ரவி

சீரியல் மட்டுமல்லாது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

  • Share this:
கனா காணும் காலங்கள் மூலம் அறிமுகமாகி புலிகேசியாக பிரபலமான ராகவேந்திர ரவி, பழையபடி என்னை விரைவில் பார்ப்பீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல் மூலம் மிகவும் பாப்புலரான ராகவேந்திரா புலி, இப்போது தன்னுடைய பிட்னஸ் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தான் மேற்கொண்டு வரும் பயிற்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அண்மையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதற்காக, 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்தபோது வெயிட்போட்டுள்ளார். சிகிச்சை மற்றும் ரெஸ்ட் என இருந்ததால் அவர், முன்பு இருந்ததைவிட கூடுதலாக வெயிட் போட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள அவர், பிட்னஸில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “My on going process....Life is to enjoy...Health is wealth எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் உடற்பயிற்சி புகைப்படங்களை பதிவிட்டு It's all about sides today (sic)” எனக் கூறியுள்ளா ராகவேந்திரா, விரைவில் எப்போதும்போல் என்னை பார்ப்பீர்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் ‘மாறன்’ கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் ரீச்சானார். முதன் முதலாக விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் சீரியலுக்கு அறிமுகமானார். அந்த சீரியலில் ‘புலிகேசி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமான அவர், தனது பெயரைக்கூட ராகவேந்திரா புலி என மாற்றிக்கொண்டார்.

Also read... விஷேச வீட்டில் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகர் வினோத் பாபு!

இதற்கு அடுத்தபடியாக ‘பகல் நிலவு’ சீரியலில் பால்சாமி கதாப்பாத்திரத்தில் நடித்தார். கார்த்திக் - ஸ்ருதிராஜ் நடிப்பில் ஹிட்டான ‘ஆபிஸ்’ தொடரிலும் புலி என்ற பெயரில் நடித்தார். அழகிய தமிழ் மகள் சீரியலில் ‘கோபி’யாக நடித்த ராகவேந்திரா, ஒரு ஊர்ல ராஜகுமாரி தொடரில் ‘சொரிமுத்து’தாக நடித்து அசத்தினார்.

சீரியல் மட்டுமல்லாது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் ஒன்று கூடினர். அதில் இருவரும் பங்கேற்றிருந்தார். அப்போது, கனா காணும் சீரியல் எடுக்கும்போது கிடைத்த அனுபவங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். இவரைப்போலவே, இவருடன் நடித்திருந்த சாய்காயத்திரி, இர்பான் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு அந்த சீரியலில் வாய்ப்பு கிடைத்தது பற்றியும், அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published: