ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு.!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு.!

Kaathuvaakula Rendu Kaadhal

Kaathuvaakula Rendu Kaadhal

Kaathuvaakula Rendu Kaadhal | படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழு.!

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். தமிழ் சினிமா வழக்கமாக பார்த்து பழகிய காதல் கதைகள் போல் இல்லாமல் ஒரு ஆண் இரு பெண்களுக்கு இடையே உள்ள காதல் மற்றும் மோதலை இந்த திரைப்படம் காட்டுகிறது. படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை நகைச்சுவையுடன் கதைக்களத்தை நகர்த்தி இருந்தார் விக்னேஷ் சிவன்.

  படம் வெளிவரும் முன்பே அனிருத்தின் இசையில் இப்படத்தின் பாடலான 'டூ டூ டூ' பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர் அனிருத்துக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மேக்கிங் காட்சி ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். திரைப்படம் உருவானவிதம், திரைப்படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை விளக்கும் வண்ணம் இந்த மேக்கிங் காட்சி உருவாகி உள்ளது.

  உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான 'ரெட் ஜெயிண்ட்' வெளியிட்ட இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் இந்த காட்சியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

  இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை இயக்க உள்ளார், எனவே இந்த திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Also Read : ஓடிடியில் நேரடியாக வெளியாகும் நயன்தாரா படம்...

  சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை நயன்தாராவிடம் 'நானும் ரவுடி தான்' படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும்போதே இருவரும் டின்னர் சென்று இருக்கும் போது நயனிடம் விக்கி இந்த படத்தின் கதையை சொன்னதாகவும் மேலும், படத்தில் வரும் கண்மணி ரோலை நயன் தான் செய்ய வேண்டும் என்பதில் விக்கி உறுதியாக இருந்ததாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

  Published by:Selvi M
  First published:

  Tags: Actress Samantha, Entertainment, Nayanthara, Vijaysethupathi