ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜாவா தீவில் சூர்யாவின் ‘காப்பான்’ ஷூட்டிங் - புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர்

ஜாவா தீவில் சூர்யாவின் ‘காப்பான்’ ஷூட்டிங் - புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர்

காப்பான் படக்குழு

காப்பான் படக்குழு

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  காப்பான் படத்தின் பாடல் படப்பிடிப்புக்காக ஜாவா தீவுக்கு சென்றுள்ளது படக்குழு.

  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

  கடந்த 14-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ஆர்யா, மோகன்லாலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சூர்யா நடிக்கும் ஒரு சில காட்சிகள் மீதமுள்ளன. அதை படமாக்கும் முயற்சியில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

  அந்தவகையில் காப்பான் படத்தின் பாடல் காட்சியை படமாக்க ஜாவா தீவுக்குச் சென்றுள்ளது படக்குழு. அங்கே எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

  காப்பான் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்திலும், விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்கத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார்.

  ஹரிஷ் கல்யாணுக்கு இப்படி ஒரு ஜோடியா? - வைரலாகும் ரியா சக்ரபோர்த்தியின் புகைப்படங்கள்

  வீடியோ: நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 42 சவரன் தங்க நகைகள் திருட்டு


  சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor Suriya, Kaappaan