Home /News /entertainment /

காப்பான் ரூ.100 கோடி வசூல், அதிரிபுதிரியான வசூல் - லைகா நிறுவனம்

காப்பான் ரூ.100 கோடி வசூல், அதிரிபுதிரியான வசூல் - லைகா நிறுவனம்

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மோகன்லால் ஆர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை புரிந்து உள்ளதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மோகன்லால் ஆர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை புரிந்து உள்ளதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    காப்பான் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

    சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. ஆர்யா, மோகன் லால், சாயிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் செய்து ரூ.100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் காப்பான் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

    காப்பான் ரூ.100 கோடி வசூல்


    இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் இதயங்களில் நிறைவும், உதடுகளில் புன்னகையும் உங்களால் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி என்பது சகஜமானது, ஆனால் சாதனை வெற்றி என்பது அபூர்வமானது.

    எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் நற்பெயரும், நல்ல வசூலும் தேடித் தந்தது காப்பான் திரைப்படத்தின் முதல் சாதனை. கேரளாவிலும் அயல் நாடுகளிலும் அதிரிபுதிரியான வசூல் கொண்டாட்ட சாதனை. மொத்த வசூலில் 100 கோடியைத் தொட்ட படங்களின் பட்டியலில் காப்பானும் சேர்ந்தது, முக்கிய சாதனை. தமிழக விவசாய அமைப்புகள் அனைத்திலிருந்தும் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றது மகத்தான சாதனை. அத்தனை தரப்பு ரசிகர்களிடமிருந்தும் குவியும் பாராட்டுக்கள் இன்னுமொரு சாதனை.

    இத்தனை சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த காப்பானின் அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இந்த வெற்றியை அங்கீகரித்த ரசிகர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

    ஆதரவாய் இருந்த, ஆழமாய் ரசனையாய் விமரிசித்த ஊடக நண்பர்களான உங்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான நெகிழ்ச்சி கலந்த நன்றி.

    லைகா நிறுவனம் தனது அடுத்தடுத்த பெரிய திரைப்பட முயற்சிகளை கம்பீரமாகத் தொடர நல்ல நம்பிக்கையை விதைத்திருக்கும் காப்பான் படக்குழுவினருக்கு மீண்டும் நன்றி என்று தெரிவித்துள்ளது



    Also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Kaappaan, Suriya

    அடுத்த செய்தி