• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்யாவின் காப்பான் எப்படி இருக்கும்? - எடிட்டர் பதில்

சூர்யாவின் காப்பான் எப்படி இருக்கும்? - எடிட்டர் பதில்

என்.எஸ்.ஜி டிஐஜி-யுடன் நடிகர் சூர்யா.

என்.எஸ்.ஜி டிஐஜி-யுடன் நடிகர் சூர்யா.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    'காப்பான்' படம் குறித்த சுவாரஸ்ய தகவலை படத்தொகுப்பாளர் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். என்.ஜி.கே படத்தை முடித்திருக்கும் சூர்யா தற்போது காப்பான் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் படத்தை எடிட் செய்த ஆண்டனி காப்பான் குறித்த சுவாரஸ்ய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விறுவிறுப்பான த்ரில்லர், பல திருப்பங்கள் கொண்டது 'காப்பான்' திரைப்படம். சூர்யா மற்றும் கே.வி.ஆனந்தின் சிறந்த படைப்பு” என்று கூறியுள்ளார்.





    மேலும் தனது எடிட்டிங்கில் உருவாகும் மற்ற படங்கள் குறித்து கருத்து பதிவிட்டிருக்கும் ஆண்டனி, ''அடுத்து கண்டிப்பாக வெற்றியடையப் போகும் இந்தப் படங்களில் வேலை செய்தது மிக்க மகிழ்ச்சி. 'எல்.கே.ஜி' (அரசியல் கலந்த மிக நகைச்சுவையான படம்), '90 எம்.எல்', (பெண்களை மையப்படுத்திய மிக நகைச்சுவையான படம்), 'தேவி 2', (குடும்பங்கள் கொண்டாடும் இரண்டு மடங்கு ஜாலியான படம்), 'வாட்ச்மேன்' (ஒரு த்ரில்லர் ஜானரில் வித்தியாசமான முயற்சி),' கென்னடி க்ளப்' (எனர்ஜிடிக் வின்னர்)” என்று கூறியுள்ளார்.



    பெண்களே உஷார்... விடுதியில் சிசிடிவி கேமரா மூலம் ஆபாச படப்பிடிப்பு - காணொளி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: