லீக் ஆனது காலா படத்தின் சண்டைக் காட்சி - படக்குழு அதிர்ச்சி

news18
Updated: February 12, 2018, 4:16 PM IST
லீக் ஆனது காலா படத்தின் சண்டைக் காட்சி - படக்குழு அதிர்ச்சி
news18
Updated: February 12, 2018, 4:16 PM IST
காலா படத்தின் சண்டைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதால், படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என சில நாட்களுக்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் படத்தின் சில வினாடிகள் கொண்ட  சண்டை காட்சி  சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

தீப்பற்றி எரியும் ஒரு இடத்தில் ரஜினியை ஒருவர் தாக்க முயற்சிப்பது போலவும், அதை தடுக்கும் ரஜினி அவரை அடிப்பது போலவும் படமாக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் எப்படி வெளியானது என்பது குறித்து படக்குழுவினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
First published: February 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்