தமிழ்ராக்கர்ஸ், பேஸ்புக் லைவ்வில் காலா வெளியானது - படக்குழு அதிர்ச்சி

news18
Updated: June 7, 2018, 8:48 AM IST
தமிழ்ராக்கர்ஸ், பேஸ்புக் லைவ்வில் காலா வெளியானது - படக்குழு அதிர்ச்சி
காலா படம் ஃபேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்ட காட்சி
news18
Updated: June 7, 2018, 8:48 AM IST
ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள காலா திரைப்படம் இணையத்தில் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் அரசியலில் களம் இறங்கிய பிறகு, வெளியாகியுள்ள திரைப்படம் காலா. இந்த படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் மீது அனைத்து தரப்பினருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி குறித்து பேசியதற்காக கர்நாடகாவிலும், தூத்துக்குடி போராட்டம் குறித்து பேசியதால் தமிழகத்திலும் காலா படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதேசமயம், டிக்கெட் விற்பனையும் மந்தமாக நடைபெற்றது. சென்னையில் விநியோகஸ்தர்களுடனான பிரச்னை காரணமாக சில திரையரங்குகள் காலா படத்தை திரையிட வில்லை.
இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் காலா படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து காலா திரைப்படத்தை பிரவீன் என்பவர் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

 

First published: June 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...