முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை கைவிடவேண்டும் - கு.ராமகிருஷ்ணன்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும்  முடிவை நடிகை விஜய்சேதுபதி  கைவிடவேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை கைவிடவேண்டும் - கு.ராமகிருஷ்ணன்
தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன்
  • News18
  • Last Updated: October 11, 2020, 11:38 AM IST
  • Share this:
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி , கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி , இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக கோவையில் பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ,இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும்  முடிவை நடிகர் விஜய்சேதுபதி கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

ஈழதமிழர்களை கொடூரமாக  கொன்று , சிங்கள பேரினவாத  அதிபர் ராஜபக்சேவிற்கு அரசிற்கு துணை போனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் எனவும், அப்படிப்பட்டவரின்  வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் தமிழத்தின் சிறந்த நடிகர்  விஜய் சேதுபதி நடிப்பது வேதனையளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.


Also read... Exclusive | சூரி என்னும் சேப்டர் என் வாழ்வில் முடிந்துவிட்டது - விஷ்ணு விஷால்



சிங்கள அரசிற்கும், தமிழ் மக்களை கொன்றொழித்த  ராஜபக்சேவிற்கும்  ஆதரவாக செயலபட்டவர் முத்தையா முரளிதரன் எனவும், தனக்கு  தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்ல  கூடியவர், சிங்கள மொழியில் மட்டுமே பேசுபவர்  முத்தையா முரளிதரன் எனவும்  இப்படிப்பட்ட நபரின் பாத்திரத்தில்,  நமது மதிப்பிற்குரிய  நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் அது உலக தமிழர்கள், ஈழதமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும் எனவும்  தெரிவித்தார்.

எந்த வடிவத்திலும், கடுளவு கூட சிங்கள அரசிற்கும், ராஜபக்சேவிற்கும் நன்மை பயக்கின்ற செயலில் நடிகர் விஜய்சேதுபதி ஈடுபட கூடாது எனவும் தெரிவித்தார்.முரளிதரன் வேடத்தில் நடிப்பது தொழில் என்று விஜய்சேதுபதி சொன்னால் அதை ஏற்கமுடியாது எனவும், இந்த செயல் தமிழர்களை சமாதானபடுத்தவும், கடந்த கால கொடுமைகளை மறக்கடிக்கவும் , தமிழர்களின் மனதை மாற்றவும்  முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர் ரூபத்தில் நடத்தப்படுகின்றது எனவும் இதற்கு நடிகர்  விஜய்சேதுபதி பயன்படுத்தபடுகின்றார் எனவும் தெரிவித்தார்.

இது  சிங்களவர்களுக்கும், ராஜபக்சேவிற்கும்  துணை போவதாக கருதப்படும் என தெரிவித்த அவர், நடிகர் விஜய்சேதுபதி இந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது திரைப்படமதான் என்று சமாதானம் சொல்லகூடாது எனவும், எந்த வடிவத்திலும் இலங்கை அரசிற்கு துணை போககூடாது எனவும் தெரிவித்த தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன்,  தமிழ்மக்கள் மத்தியில் மனிதாபிமானி, எளிமையானவர், முற்போகவாவர் என்ற எடுத்த பெயர்களை விஜய்சேதுபதி  கெடுத்து கொள்ளகூடாது எனவும், என்றும் போல விஜய்சேதுபதி  மக்கள் செல்வராக மககள் மனதில் நிலைக்க வேண்டுமானால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில்  நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதையும் தாண்டி இது  கலை, சினிமா என்று சொல்லி முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தால், நிச்சயமாக உலக தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

தந்தை பெரியார் கருத்துகளுக்கும் , பெரியாருக்கும்  பற்றுடையவராக நடிகர்  விஜய்சேதுபதி  இருந்தாலும் கூட , அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும் எனவும், திரைப்படத்தை  திரையிட நாங்கள்  அனுமதிக்க மதிக்க மாட்டோம் எனவும் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
First published: October 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading