Home /News /entertainment /

காவல்துறை அதிகாரியாக காமெடியில் கலக்கும் ஜோதிகா, ரேவதி! - ஜாக்பாட் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

காவல்துறை அதிகாரியாக காமெடியில் கலக்கும் ஜோதிகா, ரேவதி! - ஜாக்பாட் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஜாக்பாட் படத்தில் ஜோதிகா, ரேவதி

ஜாக்பாட் படத்தில் ஜோதிகா, ரேவதி

  • News18
  • Last Updated :
    ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ஜாக்பாட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

    ‘குலேபகாவலி’ பட இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி இணைந்து நடித்துள்ள படம் ஜாக்பாட். ஹீரோயினுக்கு முக்கியத்துவமளிக்கும் கதைக்களத்தைக் கொண்ட காமெடிப் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரேவதி, ஜோதிகா இருவருமே போலீஸாக நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு சரியாகத் திட்டமிடப்பட்டு, 35 நாட்களில் முடிவடைந்தது. படப்பிடிப்பின் கடைசிநாளில் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.

    இந்நிலையில், படத்தின் ஃபர்ட்ஸ் லுக்கை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.



    அதில் ஜாக்பாட் என்ற டைட்டிலுடன் ஜோதிகா, ரேவதி இருவரும் காவல்துறை அதிகாரியாக தோன்றியுள்ளனர். இந்தப் படத்தை அடுத்து ஜீத்து ஜோசப் இயக்கத்திலும் நாயகியாக நடிக்க ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

    வீடியோ பார்க்க: இரவில் போன் பண்ணி முத்தம் கேட்பேன் - என்.ஜி.கே படவிழாவில் பேசிய சூர்யா!

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actress Jyothika, Actress Revathi, Jackpot

    அடுத்த செய்தி