ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதுதான் ஜோதிகாவின் அடுத்த பட தலைப்பா?

இதுதான் ஜோதிகாவின் அடுத்த பட தலைப்பா?

ஜோதிகா

ஜோதிகா

`காற்றின் மொழி' படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு ராட்சசி என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெண்ணுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தை கொண்ட இந்தப் படத்தில், ஜோதிகாவிற்கு ஆசிரியை கதாபாத்திரம். அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் படத்தை இயக்குகிறார்.

எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

`காற்றின் மொழி' படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகின்றன. முக்கியமாக பெண்ளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் தான் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. மக்கள் எளிதில் தங்களை இணைத்துக்கொள்ளும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.

அந்த வகையில், அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு `ராட்சசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகள் கூட இருக்கிறது.

இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தற்போது கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க:

Published by:Tamilarasu J
First published:

Tags: Jyothika