அதிகம் பேசுகிறேனா? பா.ரஞ்சித் விளக்கம்

Web Desk | news18
Updated: December 6, 2018, 9:07 PM IST
அதிகம் பேசுகிறேனா? பா.ரஞ்சித் விளக்கம்
பா.ரஞ்சித்
Web Desk | news18
Updated: December 6, 2018, 9:07 PM IST
‘4 திரைப்படங்கள் எடுத்துவிட்டதால் அதிகமாக பேசுகிறான் ரஞ்சித் என்று பலர் குறை கூறுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன். படமே எடுக்கவில்லை என்றாலும், அவ்வாறுதான் பேசி இருப்பேன். இது எனக்கு என் முன்னோர் சொல்லித் தந்தது’ என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற அம்பேத்கரின் 62-வது நினைவு நாள் நிகழ்ச்சியில் ரஞ்சித் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது: ஜெய் பீம் என்ற முழக்கமிடும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உணர்ச்சி வயப்பட்டு உரத்த குரல் கொடுத்து வருகிறேன்.

காந்தியை விட தேசத்தின் நன்மைக்காக அதிகம் சிந்தித்தவர் அம்பேத்கர். இனி இந்தியாவின் தேசத் தந்தை என்று அம்பேத்கரை தான் குறிப்பிட வேண்டும்.

பெரும் பணக்காரர்கள், பட்டா வைத்திருப்பவர்கள், பட்டம் பெற்றவர்களிடம் மட்டுமே இருந்த ஓட்டு உரிமையை சேரி மக்களுக்கும் பெற்று தந்தவர் அம்பேத்கர். அதன் காரணமாகத் தான் வாக்கு கேட்பதற்காகவாவது சேரிக்குள் கால் வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

தனித் தொகுதியில் நின்று வாக்கு பெற்று சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்பவர்கள், பட்டியலின மக்களுக்கு ஏதும் செய்வதில்லை. இனியாவது வாக்களித்தவர்களுக்கு திரும்ப செய்யுங்கள். இல்லையென்றால் கட்சியை விட்டு வெளியே வாருங்கள்.

இனியும் யாராவது ஒருவர், பட்டியலின கட்சியை சாராமல் வேறு கட்சியில் இருந்து, தனித் தொகுதியில் போட்டி இட்டால் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

ஆணவப் படுகொலைகள் நிகழும்போதெல்லாம் பட்டியலினத்தை சார்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ குரல் கொடுப்பதில்லை. அவர்கள் சார்ந்துள்ள கட்சி அவர்களை தடுக்கிறது.
Loading...
எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 7 தனித்தொகுதிகளுக்கு, அனைத்து பட்டியலின கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றார் பா.ரஞ்சித்.

Also watch

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...