Home /News /entertainment /

ஜூலி வாங்கிக்கொடுத்த பைக், தங்க செயின் உள்ளிட்ட பொருட்களை திருப்பி கொடுத்த காதலர்...

ஜூலி வாங்கிக்கொடுத்த பைக், தங்க செயின் உள்ளிட்ட பொருட்களை திருப்பி கொடுத்த காதலர்...

ஜூலி

ஜூலி

ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலிக்கு கால் செய்து தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் என்று கூறிவந்துள்ளார். மனிஷை மிரட்டுவதற்காக  ஜூலி  காவல் நிலையத்தில் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பல்சர் பைக்,  தங்க நகைகள் மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக்கொண்டு தனது காதலன் திருமணத்துக்கு மறுப்பதாக காவல் நிலையத்தில் ஜூலி புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்தார்.

    சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் மூலம் கவனம் பெற்றவர் ஜூலி (எ) மரியா ஜூலியானா(26). பின்னர், பிக்பாஸ் என்ற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவர் தனது பெற்றொருடன் பரங்கி மலை ஈரோப்பியன் லேன் பகுதியில் வசித்து வருகிறார்.

    ஜூலி(எ) மரியா ஜூலியானா அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார்.  புகாரில் அண்ணா நகர் 2ஆவது அவென்யூவில் உள்ள தமிழகத்தின் மிகப்பிரபலமான அழகு நிலையத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்த அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்த மனிஷ்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த மனிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்த நிலையில், மனிஷுக்கு தான் பல்சர் இருசக்கர வாகனம், 2 சவரன் தங்க செயின், வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் வாங்கிக் கொடுத்து 2.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக ஜூலி புகாரில் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: BiggBoss Julie: காதலர் மீதான புகாரில் திடீர் திருப்பம்.. ஜூலியே காதலை துண்டித்ததாக தகவல்!


    இந்த நிலையில் போலீசார் சம்மந்தப்பட்ட மனிஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது மனிஷ் ஜூலிக்கு ஆறுதலாக இருந்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு இடையே நட்பு உண்டாகி அது காதலாக மாறியது. தற்போது வேறொருவருடன் ஜூலி நட்பாக பழகிவருவதால் மனிஷ் உடனான காதலை அவர் துண்டித்துள்ளார்.

    ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலிக்கு கால் செய்து தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் என்று கூறிவந்துள்ளார். மனிஷை மிரட்டுவதற்காக  ஜூலி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்தார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bigg boss Julie

    அடுத்த செய்தி