உள்ளே வலிக்கும் வலி உங்களுக்கு தெரியாது..வைரலாகும் சிம்புவின் வீடியோ
உள்ளே வலிக்கும் வலி உங்களுக்கு தெரியாது..வைரலாகும் சிம்புவின் வீடியோ
சிம்பு
சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரது உடல் எடை குறைப்பு தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது..13.41 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில் சிம்பு களரி, சிலம்பம், நடனம் போன்ற கடின பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உடல் எடை குறைப்பு தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வெளியானது. கடும் பயிற்சிகளை சிம்பு மேற்கொண்ட காட்சிகளை கொண்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை வாய்ந்தவர் சிலம்பரசன். காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிம்பு, அடுத்த 2 ஆண்டுகளிலேயே மன்மதன் திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்து திரையுலகை திரும்பி பார்க்கவைத்தார்.
திரைப்படங்களுக்கு கால்சீட் தருவதில்லை பிரச்சனை, சூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என நடுவில் பல்வேறு சர்ச்சைகளில் நடிகர் சிம்பு சிக்கினார். மேலும் அவரது உடல் எடையும் கூடியது. உடல் எடை அதிகரித்து அவர் நடித்த வந்த ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் அவரது தோற்றம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதையடுத்து, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட நடிகர் சிம்பு, 2 ஆண்டுகளே உடல் எடையை குறைத்து மாநாடு திரைப்படத்தில் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரது உடல் எடை குறைப்பு தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 13.41 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில் சிம்பு களரி, சிலம்பம், நடனம் போன்ற கடின பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
உடல் எடை என்பது குறைக்க முடியாதது அல்ல, பிறருக்கு உத்வேகம் தரும் விதத்தில் அமைந்துள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.