ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகிவரும் காற்றின் மொழி படத்தின் டீசர் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகுமெனப் படக்குழு தெரிவித்துள்ளது.
மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராதாமோகன். இவரது இயக்கத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் காற்றின் மொழி திரைப்படம் உருவாகி வருகிறது. இதை தனஞ்ஜெயனின் போஃப்டா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் டீசர் செப்டம்பர் 20-ம் தேதி வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஏ ஹெச் காஷிஃப் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விதார்த், லஷ்மி மஞ்சு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இயல்பான கதாபாத்திரங்களை வைத்து வெகு சுவாரசியமான திரைக்கதையை வடிவமைப்பதில் ராதாமோகன் கைதேர்ந்தவர். ஏற்கெனவே ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த மொழி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Saravana Siddharth
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.