இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரை வெளியேற்றிய பிக்பாஸ் - லீக்கான தகவல்

இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரை வெளியேற்றிய பிக்பாஸ் - லீக்கான தகவல்

பிக்பாஸ்

BIGG BOSS TAMIL 4 | பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்படப்போவது யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

  • Share this:
50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும் சுசித்ரா ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டு 14 போட்டியாளர்கள் மீதமிருக்கின்றனர். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய ஏழு பேர் சக போட்டியாளர்களால் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் வார இறுதியில் வெளியேற்றப்படும் நபர் யாராக இருக்கும் என்று பிக்பாஸ் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நாமினேஷன் கார்டு என்ற புதிய முறையை அறிமுகம் செய்தார் பிக்பாஸ். நாமினேஷனில் லிஸ்டில் இருப்போரில் யார் இந்தக் கார்டைப் பெறுகிறாரோ அவர் வீட்டிலிருக்கும் ஒரு போட்டியாளரை நாமினேட் செய்யலாம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து நாமினேஷன் கார்டைப் பெற்ற அனிதா, சம்யுக்தாவை நாமினேட் செய்தார். அதனால் அனிதா வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சம்யுக்தா சேர்க்கப்பட்டார். எனவே இந்த வாரம் சம்யுக்தா அல்லது நிஷா வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிக்பாஸ் ரசிகர்கள் கணித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.வீட்டில் தனக்கு தேவையில்லாத பிரச்னைகளில் அதிகம் மூக்கை நுழைக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் நடந்த கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யா கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக சரியாக பதிலளித்து பலரது பாராட்டையும் பெற்றார். இதையடுத்து இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராகவும் ஜித்தன் ரமேஷ் தேர்வாகியுள்ளார். அவருடன் பாலா மற்றும் ரம்யா பாண்டியனும் தேர்வாகியுள்ளார்கள்.

எனவே இந்த மூவரில் ஒருவர் தான் அடுத்த வார தலைவர் போட்டிக்கு போட்டியிட தகுதியானவர்கள் என பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதில் பாலாஜி வீட்டின் தலைவராக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: