ஜியோ சாவன் : விஜய்யின் குட்டி ஸ்டோரியை பின்னுக்குத் தள்ளிய வெய்யோன் சில்லி

ஜியோ சாவன் : விஜய்யின் குட்டி ஸ்டோரியை பின்னுக்குத் தள்ளிய வெய்யோன் சில்லி

சூர்யா | விஜய்

ஜியோ சாவன் செயலியில் இந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட பாடல்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
ஜியோ நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சாவன் செயலி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம் 2020-ம் ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட பாடல்களுக்கான பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் இடம் பிடித்த வெய்யோன் சில்லி பாடல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 66 லட்சம் பேர் சாவன் செயலியில் இந்த பாடலை கேட்டு உள்ளனர்.

இதையடுத்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் அனிருத் இசையில் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் 62 லட்சம் ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டு இரண்டாவது இடத்தையும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடல் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களையும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் மற்றும் அந்த கண்ண பார்த்தாக்கா ஆகிய பாடல்கள் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் முதல் பாடலைத் தவிர எஞ்சிய நான்கு பாடல்களும் அனிருத் இசையில் உருவான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படம், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம், இந்தியன் 2 என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: