ஜெயம் ரவியின் ‘பூமி’ பொங்கலுக்கு ஓடிடி தளத்தில் ரிலீஸ்

ஜெயம் ரவியின் ‘பூமி’ பொங்கலுக்கு ஓடிடி தளத்தில் ரிலீஸ்

பூமி பட ஸ்டில்

‘பூமி’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ரோமியா ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பூமி’. ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் அதை படக்குழு உறுதி செய்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பொங்கல் தினத்தில் ‘பூமி’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி விடுத்திருக்கும் அறிக்கையில், “எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க, முழுக்க ரசிகர்களாகிய உங்களால் ஆனது. நீங்கள் அளித்த அளவற்ற அன்பு என்மேல் நீங்கள் வைத்த மிகப்பெரும் நம்பிக்கை, நீங்கள் அளித்த உத்வேகம் தான், சிறப்பான படங்களில் நான் பணியாற்ற காரணம். எனது கடினமான காலங்களில் என்னை உங்களின் சொந்த ரத்தம் போலவே நினைத்து ஆதரவளித்தீர்கள்.

உங்களின் இந்த ஆதரவோ, சினிமா மீதான எனது காதலை நிலைபெற செய்தது. நீங்கள் இல்லாமல் என்னால் இத்தனை தூரம் வெற்றிகரமாக பயணித்திருக்க முடியாது. உங்களை எனது குடும்பத்தினராகவே கருதுகிறேன் ‘பூமி’ திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல். இந்தப் படம் எனது திரைப்பயணத்தில் 25-வது படம் என்பதைத் தாண்டி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட் -19 காலத்தில் ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இணைந்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். நிறைய பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து எனது திரைப்படத்தைப் பார்த்து பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள். இந்த பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களை சந்திப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்” இவ்வாறு நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: