ஓடிடியில் ரிலீசானதும் இணையத்தில் வெளியான ‘பூமி’ திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி

ஓடிடியில் ரிலீசானதும் இணையத்தில் வெளியான ‘பூமி’ திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி

பூமி பட ஸ்டில்

ஓடிடி தளத்தில் வெளியான சில மணி நேரத்தில் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்பட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • Share this:
ரோமியா ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பூமி’. ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இதையடுத்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பொங்கல் தினத்தில் ‘பூமி’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று காலை படம் வெளியான சில மணி நேரங்களில் திருட்டுத்தனமாக படத்தை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

முன்னதாக நேற்று வெளியான மாஸ்டர் திரைப்படமும் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் கசிந்தது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சில மணி நேரங்களில் படத்தை வெளியிட்ட நபரை பொறி வைத்து பிடித்தது படக்குழு. அதேபோல் ரசிகர்களும் மாஸ்டரை திரையில் மட்டுமே பார்ப்போம் என்பதில் உறுதியாக இருந்தனர்.

மேலும் படிக்க: சீமானிடம் பேசி துக்ளக் தர்பார் பிரச்னையை தீர்த்த பார்த்திபன்

2021-ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்கள் தியேட்டரிலும் ஜெயம் ரவியின் பூமி ஓடிடி தளத்திலும் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி சன் டிவியிலும் வெளியாகிறது. எனவே இந்த பொங்கல் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமாக அமைந்திருக்கிறது.

இதுவரை பண்டிகை காலத்தில் திரையில் மட்டுமே வெளியாகி வந்த தமிழ் திரைப்படங்கள் இம்முறை மூன்று வகையில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: