ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜெயலலிதாவாக நித்யாமேனன்... சசிகலாவாக வரலட்சுமி: உருவாகிறது `தி அயர்ன் லேடி’

ஜெயலலிதாவாக நித்யாமேனன்... சசிகலாவாக வரலட்சுமி: உருவாகிறது `தி அயர்ன் லேடி’

ஜெயலலிதா- சசிகலா

ஜெயலலிதா- சசிகலா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  இயக்குநர் பிரியதர்ஷினி வரலட்சுமி சரத்குமாரை வைத்தி சக்தி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய பிரியதர்ஷினி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி தயாரிக்கப் போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

  அந்த அறிக்கையில், ``ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதற்கும், அந்த களத்தை மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளை தகர்த்தெறிந்து, நமக்கெல்லாம் இன்றும் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிய, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியான ஜெயலலிதாவின்  வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பதற்கான பணிகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

  ஒரு பெண்ணாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவதற்கான வாய்ப்பை பெருமையாக நினைப்பதை காட்டிலும், கடமையாக உணர்கிறேன். முன்னணி நடிகர்கள் நடிக்க தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 24 - ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டிருந்தது.

  இந்நிலையில் படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். `தி அயர்ன் லேடி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனனும், சசிகலாவின் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர்.

  இது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Jayalalitha Biopic, Jayalalithaa, Movie, The Iron Lady