Home /News /entertainment /

நெகிழ வைத்த ஜான்வி கபூர் - வைரலாகும் வீடியோ

நெகிழ வைத்த ஜான்வி கபூர் - வைரலாகும் வீடியோ

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

  • News18
  • Last Updated :
    தீபாவளி பண்டிகையின் போது நடிகை ஜான்வி கபூர், செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில், தமிழ் சினிமாவிலும் இவர் அறிமுகமாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

    சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கலந்துகொண்டார். அப்போது நீங்கள் உடுத்திய உடையை மீண்டும் உடுத்துவதால் கேலிக்குள்ளாக்கப் படுகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த ஜான்வி, எனது நடிப்பு பற்றி விமர்சித்தால், அதனை கவனத்தில் எடுத்துக் கொள்வேன். ஆனால் நான் அணிந்திருக்கும் உடை பற்றி விமர்சிக்க, இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தினம் ஒரு புதுத்துணி உடுத்தும் அளவுக்கு நான் சினிமாவில் இன்னும் சம்பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    ஜான்வி கபூர் பார்டிக்கு செல்வது, சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்று அவரைச் சுற்றி எப்போதுமே ஒரு ரசிக வட்டம் இருக்கிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையின் போது ஜான்வி கபூர் செய்த ஒரு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஹோட்டல் ஒன்றுக்கு ஜான்வி வரும் போது சிறுவன் ஒருவர் அவரிடம் காசு கேட்கையில், காரில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டை அவர் எடுத்து கொடுப்பார். பின்னர், மீண்டும் அந்த சிறுவனின் தாய் தீபாவளிக்கு காசு கொடுங்கள் என்று ஜான்வியிடம் கேட்க, அவர் ஹோட்டல் உள்ளே சென்று விடுவார்.



     




    View this post on Instagram




     

    #janhvikapoor snapped at salon in bandra today #viralbayani @viralbhayani


    A post shared by Viral Bhayani (@viralbhayani) on






    பின்னர், உள்ளே இருந்து வெளி வந்த அவர், சிறுவனின் கையில் காசு கொடுத்து அனுப்புவார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

    Also See...

    Published by:Sankar
    First published:

    Tags: Janhvi kapoor

    அடுத்த செய்தி