Janani Ashok Kumar : ‘ப்ளீஸ் திட்டாதீங்க’ - சின்னக்குயில் சித்ரா குரலில் அசத்தும் 'செம்பருத்தி' சீரியல் நடிகை!

'செம்பருத்தி' சீரியல் நடிகை

புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஏதேதோ' பாடலை சீரியல் நடிகை ஜானகி அசோக்குமார், தனது குரலில் பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில

  • Share this:
கோவையைச் சேர்ந்த ஜானகி அசோக்குமார் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆவார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நண்பேன்டா படத்தில், நயன்தாரா தோழியாக நடித்திருந்த அவர், சின்னத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரில் ஜனனியாக நடித்த அவர், இல்லதரசிகளிடையே அமோக வரவேற்பை பெற்றார். அந்த சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் மார்டன் உடைகளில் ஜொலிக்கிறார்.

ஃபேஷன் டிஸைனிங்கும் செய்து வருகிறார். ஓய்வு நேரத்தில் கேக், குக்கீஸ் போன்ற பேக்கிங் ஐட்டங்களை செய்து அசத்தும் ஜனனி பாடகியாகவும் மாறியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில், சின்னக்குயில் சித்ரா அவர்கள் பாடிய 'ஏதேதோ' பாடல் இன்றளவும் பிரலபமாக உள்ளது. அந்தப் பாடலை தனது குரலில் பாடியுள்ள ஜனனி, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார். ப்ளீஸ் திட்டாதீங்க என்று கேப்சனில் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ALSO READ |  ’வாழ்க்கை ஒண்ணும் பாரமில்ல வா லேசா’ மனதை அமைதியாக்கும் யுவனின் பாடல்!

மௌன ராகம், ஆயுத எழுத்து மற்றும் செம்பருத்தி சீரியல்களிலும் அவர் நடித்தார். குறிப்பாக, செம்பருத்தி சீரியலில் இருந்து தான் நீக்கப்பட்டதற்காக யூ டியூப் நேரலையில் அவர் அழுதது, சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடரில், கார்த்திக் ராஜ், ஷபானா உள்ளிட்டோர் நடித்தனர். இத்தொடரில் ‘அகிலாண்டேஸ்வரி’ கதாபாத்திரத்தின், 2-வது மருமகளாக ஜனனி அசோக் குமார் நடித்திருந்தார்.

 

 

 




 

 

இவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், திடீரென அந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்ட அவர், இதனை யூடியூப் சேனல் லைவ்வில் கூறினார். மேலும், தனக்கென ஒரு யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜனனி அசோக் குமார், அதில் அழகு குறிப்புகள் உள்ளிட்டவைகளை பகிர்ந்து வருகிறார். அவரின் டிப்ஸைக் கேட்பதற்காக ஏராளமானோர் அவரது யூ டியூப் சேனலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

ALSO READ |  வைரமுத்துக்கு விருது - புயல் கிளப்பிய 'பூ' பார்வதியின் பின்னணி!

இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை வைத்துள்ள அவர், அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களையும் எடுத்து பதிவேற்றி வருகிறார்.

 

 




 

 

தமிழ் மணம் கமுழும் சேலையில் வித்தியாசமாக அவர் எடுக்கும் புகைப்படங்களுக்கு பலர் ரசிகர்களாக உள்ளனர். அழகு குறிப்பு நிபுணராகவும் அவர் இருப்பதால், அவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பார்பவர்களை கண்குளிரச் செய்யும் வகையில் உள்ளன.

 

 




 

 

 

நேர்த்தியான புடவையில், பாரம்பரியம் மாறாமல் அவர் கொடுக்கும் ஸ்டைல், விழா காலங்களில் புடவை அணிவதற்கான மேக்கப் டிப்ஸாக இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர். அழகு கலை நிபுணர், நடிகை என இருந்த ஜனனி இப்போது பாடகியாகவும் மாறியிருக்கிறார்.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: