"தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" - அட்வைஸ் பண்ண சீரியல் நடிகை யார் தெரியுமா?

நடிகை ஜனனி அசோக்குமார்

தடுப்பூசி போட்டுக்கொண்ட சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார், மக்களும் தயங்காமல் போட்டுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share this:
சின்னத்திரை நடிகையான ஜனனி, தன்னைப் பற்றிய அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில், 2 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், மக்களும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவம் நன்றாக இருந்ததாக தெரிவித்துள்ள ஜனனி அசோக்குமார், வலியில்லை எனத் கூறியுள்ளார்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, முயற்சி எடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றும், அப்போது தான் பாதுகாப்பாக நாம் இருக்க முடியும் எனத் மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். ஊரடங்கில் வீட்டில் இருக்கும் அவர், ஜாலியான நேரங்களில் பாடல்கள் பாடி அசத்துகிறார். கிளாசிக் மற்றும் முன்னணி பாடகர்கள் பாடிய பாடலை தேர்தெடுத்து பாடும் அவர், ஏதும் தவறு இருந்தால் தயவு செய்து திட்டிவிடாதீர்கள் என்றும் ரசிகர்களிடம் செல்லமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாடகி சின்னக்குயில் சித்ரா பாடிய ஏதேதோ பாடலை பாடியிருந்தார். அவர் பயந்தாலும் குரல் நன்றாக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். நடிகை மட்டுமல்லாமல் சிகை அலங்கார நிபுணராகவும் இருக்கும் அவர், பியூட்டி டிப்ஸ்களையும் ரசிகர்களுக்காக பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் மார்டன் உடைகளில் ஜொலிக்கிறார். 4 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்களை வைத்துள்ள ஜனனி, தமிழ் மணம் கமழும் சேலையில் வித்தியாசமாக எடுக்கும் புகைப்படங்களுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

ஓய்வு நேரங்களில் கேக், குக்கீஸ் போன்ற பேக்கிங் ஐட்டங்களையும் தயார் செய்து, வீடியோவாக யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார். தற்போது, நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் சரண்யா ராஜரத்தினமாக நடிக்கிறார். மாப்பிள்ளை தொடரில் ஜனனியாக நடித்தது சின்னதிரையில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

Also Read : லாக்டவுனில் சாலையோரவாசிகளுக்கு உதவும் சன் டிவி சீரியல் நடிகை

மௌன ராகத்தில் மல்லிகா கதாப்பாத்திரத்திலும், ஆயுத எழுத்து தொடரில் மேகலாவாகவும் நடித்தார். பின்னர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலிலும் நடித்திருந்தார். அந்த தொடரில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரம், அவரின் நடிப்பு திறமைக்கு ஏற்ற வகையில் அமைந்திருந்ததால், இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், திடீரென செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட அவர், இதனை யூ டியூப் லைவ்வில் கூறி கண்ணீர்விட்டு அழுதார். இது சமூகவலைதளங்களில் பரபரப்பான டாப்பிக்காக மாறி, பேசுபொருளானது. தற்போது யூ டியூப்பில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வரும் ஜனனி அசோக்குமார், பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகளையும் தெரிவிக்கிறார்.
Published by:Vijay R
First published: