ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டாப் ஹீரோக்களுக்கு போட்டி.. அதிகாலை ஷோவுடன் ரிலீஸ் ஆனது அவதார்.. ரசிகர்கள் உற்சாகம்!

டாப் ஹீரோக்களுக்கு போட்டி.. அதிகாலை ஷோவுடன் ரிலீஸ் ஆனது அவதார்.. ரசிகர்கள் உற்சாகம்!

அவதார்

அவதார்

Avatar The Way of Water: அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக அதிகாலை ஷோவுடன் ரிலீஸ் ஆனது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர், உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிட விநியோக நிறுவனத்துடன் சில திரையரங்குகள் உடன்பாடு செய்த நிலையில் சென்னையிலும் வெளியானது. டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக அதிகாலை ஷோவுடன் இந்தப்படம் ரிலீஸ் ஆனது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளிவந்த “அவதார்” திரைப்படம், உலக சினிமாவில் அதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற புதிய சாதனையைப் படைத்தது. இந்தியாவில் மட்டும் 100 கோடிகளைக் கடந்து வசூல் ஈட்டியது.

13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “Avatar: The Way Of Water” வெளியாகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில், 160 மொழிகளில் வெளியாக உள்ளது “Avatar: The Way Of Water” திரைப்படம். இந்தியாவில் மட்டும் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் மூன்றாயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் முன்பதிவு தொடங்கிய நிலையில் சுமார் 10 கோடிக்கு மேலாக டிக்கெட் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பிவிஆர் சினிமாவில் இரண்டாயிரத்து 500 ரூபாயும், என்.சி.ஆர் பகுதியில் 700 முதல் ஆயிரத்து 600 ரூபாய் வரையும் டிக்கெட் விற்பனையாவதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் 500 ரூபாய் முதல் ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் புனைகதை வரிசையில், தோற்ற மெய்ம்மை எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில், 250 பில்லியன் செலவில் எடுக்கப்பட்டுள்ள அவதார் இரண்டாம் பாகமும், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Hollywood, James Cameron