ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வசந்தபாலன் கடைசியாக 2014-ம் ஆண்டு காவியத்தலைவன் என்ற படத்தை இயக்கினார்.
இதையடுத்து தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் ஜெயில். ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கலர்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரோனித் ராய், யோகிபாபு, ரோபோ சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். அவருடன் இணைந்து நடிகை அதிதி ராவ் சொந்தக் குரலில் பாடி தமிழில் பாடகியாகவும் அறிமுகமாகிறார். சென்னை வாழ்க்கை, காதலைப் பேசும் இந்தப் பாடலில் ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதிக்கு நெருக்கமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
ஜி.வி.பிரகாஷின் 33-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.