பிரபலங்கள் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "JAI HIND INDIA" பாடல் வீடியோ

"JAI HIND INDIA" பாடல் ஹாக்கி விளையாட்டுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்குமான பாடல் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 12:31 PM IST
பிரபலங்கள் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்
ஷாரூக்கான் -ஏ.ஆர்.ரஹ்மான்
Web Desk | news18
Updated: December 7, 2018, 12:31 PM IST
2018 உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "JAI HIND INDIA" என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா, கடந்த மாதம் 28-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு வெகு விமர்சையாக தொடங்கியது. அதில்  பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷிதின் நடனமும், ஏ.ஆர்.ரஹ்மானின் "JAI HIND INDIA" பாடலும் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், "JAI HIND INDIA" பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கவிஞர் குல்சார் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், நகுல் அப்யன்கார் மற்றும் எம்சி ஹீம் ஆகியோர் பாடியுள்ளனர்.

"JAI HIND INDIA" பாடலில் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா


தேசியக் கொடியின் மூவர்ணங்கள், வண்ண விளக்குகளில் ஒளிர தொடங்கும் இந்த பாடல், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் தத்துவத்தை பறைசாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் கலாச்சாரங்களும், மதநல்லிணக்கமும் "JAI HIND INDIA" பாடலில் எதிரொலிக்கின்றன.

ஷாரூக்கான்-னுடன் ஸ்டுடியோவில் ஜெய் ஹிந்த் பாடல் பதிவில் ஏ.ஆர்.ரஹ்மான்


இந்த பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். நடிகர் ஷாரூக்கான் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் நடனமும் ஆடியிருக்கிறார். மேலும் இந்தப் பாடல் ஹாக்கி விளையாட்டுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்குமான பாடல் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Loading...
"JAI HIND INDIA"  பாடல் வீடியோ வெளியீடு



Also see... வேகமாக உருகும் பனிப்பாறை....கரடிகள் அழியும் அபாயம்!
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626