• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sathya: போலீஸ் கெட்டப்பில் மாஸ் என்ட்ரி - சத்யா சீரியலில் இணைந்த பிரபலம்!

Sathya: போலீஸ் கெட்டப்பில் மாஸ் என்ட்ரி - சத்யா சீரியலில் இணைந்த பிரபலம்!

சத்யா சீரியல்

சத்யா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.

  • Share this:
சத்யா சீரியலில் போலீஸ் கெட்டப்பில் ஜெய் ஆகாஷ் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி, யாரடி நீ மோகினி தொடர்கள் வெற்றியைத் தொடர்ந்து சத்யா சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆயிஷா - விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். குடும்பம், காதல் என்ற கதைக்களத்தில் பயணிக்கும் இந்த தொடர் 2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீரியல் ஹிட்டானாலும் இயக்குநர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கின்றனர். முதல் ஐம்பது எபிசோடுகளை இயக்குநர் அருண் இயக்கிய நிலையில், சீரியலில் இருந்து விலகினார். அதன்பிறகு இயக்குநராக பணியாற்றிய சுதர்சன் 90வது எபிசோடுகளுக்கு பிறகு அவரும் விலகினார். இயக்குநர் கார்த்திக் 90வது எபிசோடில் இருந்து 210வது எபிசோடுகள் வரை இயக்கி மக்களிடையே நல்ல ரீச் கிடைக்க முக்கிய பங்காற்றிய அவரும் விலகினார். தற்போது இயக்குநர் நடராஜ் சத்யா சீரியலின் கதைக்களத்தை இயக்கி வருகிறார்.

யுவஸ்ரீ, ராஜசேகர், ஜானக, கோலி ரம்யா, பாண்டி ரவி, இந்திரன், ராஜ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜீ பெங்காலி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சிந்துரா பிந்து என்ற தொடரின் மறு ஆக்கம் சத்யா தொடர். லீட் ரோலில் நடிக்கும் சத்யா, பெண்ணாக இருந்தாலும் ஆண் குணாதிசயங்களை கொண்டவர். அவருக்கு பெண்களைக் காட்டிலும் ஆண்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு மிகவும் பிடிக்கும். நடை உடை பாவனை என ஆணைப் போல் கம்பீரமாக காட்சியளிக்கும் அவருக்கும் பணக்கார வீட்டுப் பையனான பிரவுக்கும் காதல் மலர்கிறது. இந்தக் காதலில் ஏற்படும் திருப்பங்கள், அவர்களின் வீட்டில் கிளம்பும் எதிர்ப்பு என அவற்றை மையமாகக்கொண்டு கதைக்களம் விறுவிறுப்பாக நகர்கிறது.



கொரோனா காலமாக சிறிது காலம் சீரியல்களுக்கு மக்கள் இடைவெளிவிட்டிருந்த நிலையில், மீண்டும் சீரியல்களின் கதையம்சம் மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளால் அதன் மீது ஈர்ப்பு கொள்ளத் தொடங்கியிருகின்றனர். அதற்கேற்ப சத்யா சீரியலில் முக்கிய ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. போலீஸ் கெட்டப்பில் புதிய நடிகர் ஒருவர் அறிமுகமாகி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் வேறுயாருமில்லை. நீ தானே என் பொன்வசந்தம் சீரியலில் ஹீரோவாக நடித்த ஜெய் ஆகாஷ், சத்யா சீரியலில் போலீஸாக வந்துள்ளார். பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் சத்யாவுக்கு அவர் உதவிக்கரம் நீட்டுகிறார்.

Also read... Raja Rani: அர்ச்சனாவின் சதிகள் அம்பலம் - ராஜா ராணி 2 சீரியலில் உட்சக்கட்ட திருப்பம்!

அவருடைய கதாப்பாத்திரம் என்னென்ன செய்யப்போகிறது என்பது சத்யா சீரியல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய வருகைக்கு பின்னர் இன்னும் பல டிவிஸ்டுகளும், கதையில் வேகமும் அதிகரிக்கும் என பரவலான பேச்சாக உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: