ஜெயலலிதா நினைவு தினத்தில் வெளியான ‘தலைவி’ படத்தின் நியூ ஸ்டில்ஸ்

ஜெயலலிதா நினைவு தினத்தில் வெளியான ‘தலைவி’ படத்தின் நியூ ஸ்டில்ஸ்

தலைவி பட ஸ்டில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தார் ஜெயலலிதா. உடல் நலக்குறைவால் 2016-ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். அவரின், நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பிரபலமான ஜெயலலிதா, மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். இதில், எம்.ஜி.ஆர்-வுடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். திரைப்படத்துறை மற்றும் தமிழக அரசியலில் கோலோச்சிய ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்துள்ளார்.



ஏற்கெனவே இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையில், இன்று ‘தலைவி’ படத்தின் புதிய புகைப்படங்களை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையைச் சொல்லும் விதமாக அமைந்துள்ளன. மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் ‘தலைவி’ படத்தின் ஷூட்டிங்கை முடிக்க இயக்குநர் ஏ.எல்.விஜய் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.



சமூகவலைதளத்தில் ‘தலைவி’ படத்தின் புகைப்படங்களை பதிவிட்டிருக்கும் கங்கனா, இன்று ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்ததும் குறிப்பிடத்தக்கது.



ஏற்கெனவே வெப் தொடராக வெளிவந்த ‘குயின்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘தலைவி’ திரைப்படத்துக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் படக்குழுவினர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: