Home /News /entertainment /

மூன்று நாளாக நடைபெற்ற வருமான வரிச்சோதனை - பெரிய அளவில் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்

மூன்று நாளாக நடைபெற்ற வருமான வரிச்சோதனை - பெரிய அளவில் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்

 நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட்

சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிரபல பாலிவுட் நடிகராக இருந்துவருபவர் சோனு சூட். இவர், தமிழிலும் ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, ஓடிவந்து உதவினார் சோனு சூட்.

    தன்னுடைய சொத்துகளை அடகுவைத்து கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவியதன் மூலம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தார். பீகார் புலம் பெயர் தொழிலாளர்கள் சாலைகளில் பேனர் வைத்து சோனு சூத்துக்கு தங்களது நன்றியை வெளிப்படுத்தினர்.

    இந்தநிலையில், டெல்லி மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகளுக்கு சோனு சூட்டை விளம்பரத் தூதராக நியமித்தது. அதனையடுத்து, அவர் ஆம் ஆத்மியில் சேர்கிறாரா என்று கேள்வி எழுந்தன. அந்தக் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். இந்தநிலையில், மும்பையிலுள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் இருதினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியுள்ளனர்.

    மூன்று தினங்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சோனு சூட் வரி ஏய்பு செய்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் திரைப்படங்கள் மூலமும், சோனு சூட்டில் சொந்த நிதி நிறுவனம் மூலமும் வந்த பணம் மறைக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையிலிருக்கும் சோனு சூட்டின் ஆறு மாடி கட்டிடத்தை உரிய அனுமதி இல்லாமல் ஹோட்டலாக மாற்றி பயன்படுத்துவதாக மும்பை மாநகராட்சி வழக்குப் பதிந்தது. அதனையடுத்து, மும்பை மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து சோனு சூட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சோனு சூட்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், News On Instagram, Sonu sood

    அடுத்த செய்தி